மக்கள் பணியில் தன்னை அற்பணிக்கும் உணர்வு தன்னல மற்ற தியாகம் நற்பணி செய்வதில் ஆர்வம் அனைவருக்கும் சமநீதி என்பவற்றில் நாட்டம் கொண்டவர்கள் எல்லாம் அணி திரண்டு வாரீர் சமுதாயத்தில் புதிய மறுமலர்ச்சி உருவாக்க நாமும் சேர்ந்து பாடுபடுவோம். -Dr.டிக்சன்
மக்கள் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் டிக்சன் | கொடுங்குளம் ராஜேந்திரன்-மகாத்மா காந்தி மக்கள் கட்சி
MGMK LEADER
1.பூரண மதுவிலக்கு கட்சியின் முக்கிய கொள்கையாக எடுத்து போராட வேண்டும். 2.ஊழலை ஒழிக்க கட்சித் தொண்டர்கள் ஒருமித்து குரல்கொடுத்து போராட வேண்டும். 3.ஆணவப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 4.ஆதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இயக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும். 5.கூலிப்படையினர்களின் அட்டகாசம் அடியோடு ஒழிக்கப்படவேண்டி கட்சி பாடுபடும். 6.இயக்க உறுப்பனர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருமித்த கொள்கைகளுடன் செயல்பட்டு ஒடுக்கப்பட்ட விழிம்புநிலை மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். 7.மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு கேடுவிளைவிக்கும் மத்திய மாநில அரசின் நடவடிக்கைகள் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை அகிம்சை முறையில் எதிர்க்கவும்,மக்களிடையே சமத்துவம் சகோதரத்துவத்தை உருவாக்கவும்,ஜாதி,மத,இன,மொழிகளுக்கு அப்பார்பட்ட நல்லாட்சி மலர்ந்திட கட்சி போராடும். 8.இலவச மருத்துவம் – இலவச கல்வி கிடைக்கப் பெற வேண்டும். 9.அனைத்து தரப்பு மக்களுக்கும் சமநீதி கிடைக்க கட்சி போராடும். 10.மூளைவளர்ச்சி குன்றியவர்கள், மனநோயாளிகள், விதவைகள், அனாதைகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்திடவும், கருனை மனம் படைத்த சிறந்த மனிதா்களிடமிருந்து உதவிகளை அம்மக்களுக்கு பெற்றுத்தரவும், கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் பாடுபடவேண்டும்.
கழக உறுப்பினர்கள்
சார்பு அணிகள்
மாநிலங்களவை உறுப்பினர்கள்