தக்சன் தனது அரசியல் பயணத்தை சமூக சேவையை அடிப்படையாகக் கொண்டு காமராஜர் கிராமிய அறக்கட்டளை மூலம் தொடங்கினார். கிராமப்புற மக்களின் கல்வி, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக செயல்படும் இந்த அறக்கட்டளை, அவரது பொது வாழ்க்கையின் முதல் அடித்தளமாக அமைந்தது.
பின்பு தக்சன் தனது அரசியல் பயணத்தை தமிழக மறுமலர்ச்சி முன்னணி மூலம் மேலும் மெருகேற்றினார். இந்த அமைப்பின் வழியாக அவர் சமூக மாற்றம், மக்கள் நலன் மற்றும் அரசியல் விழிப்புணர்வுக்காக செயற்பட்டு தனது அரசியல் அனுபவத்தை விரிவுபடுத்தினார்.
பின்பு தனது அரசியல் பயணத்தின் வெற்றியும் அனுபவமும் காரணமாக, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி எனும் கட்சியை வழிநடத்தும் வாய்ப்பை தக்சன் பெற்றார். மக்கள் சேவை, சமூக நீதி மற்றும் வளர்ச்சியை மையமாகக் கொண்டு அவர் தனது அரசியல் பாதையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார்.