இலவசம் வேண்டாம், நல்லாட்சி வேண்டும்
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இல்லாத தெருக்களே இல்லை. இன்று சிறியவர் முதல் பெரியவர்கள் வரைக்கும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். போதாக்குறைக்குப் பள்ளியில் பயின்று வரும் பெண்பிள்ளைகள் மதுபான பாட்டில்களை கையில் ஏந்தி சியேஸ் சொல்கிற அவலநிலையைப் பார்க்கின்றோம். இவை மட்டும் போதாது என்று கஞ்சா கலாச்சரம் வேறு! கல்வி பயின்று வருகின்ற மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் கஞ்சா போதைக்கு அடிமையாகி, தமிழ்நாட்டில் நடந்து வருகின்ற படுகொலைகள், விபத்துக்களை நாம் பார்க்கவேண்டிய அவல சூழ்நிலை வேறு! மக்களை நல்வழிப்படுத்தி ஆளவேண்டிய ஆட்சியாளர்கள் இங்கே மக்களுக்கு பெரும் தவறை இழைக்கிறார்கள். மது குடித்து அப்பாவி மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துகொண்டாதான் அரசுக்கு வருமானம் என்ற நிலை தமிழ்நாட்டில்!
“மக்களை போதைக்கு அடிமையாக்கி ஆட்சி செய்வது அரசியல் அல்ல; அது சமூகத்தை அழிக்கும் குற்றம்.”
தமிழகத்தை தொடர்ந்து 50 வருடங்கள் மாறிமாறி ஆண்ட திராவிடக் கட்சிகள் செய்த சாதனைகள் தான் என்ன? அந்த கட்சிகளில் பெரும்பதவி வகித்தவர்கள் தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தனியார் மருத்துவ மனைகள், மது ஆலைகள் என்று உருவாக்கி தமிழகத்தை நாசமாக்கியதுதான்!
சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு இன்று என்ன நீதி கிடைக்கிறது! சமுதாய தீமைகளை சகித்துக்கொண்டு ஏழைகளாய் வாழ்ந்து ஒவ்வொரு தேர்தலின் பொழுது 2 ஆயிரம், 5 ஆயிரம் காசையும், இலவசங்களையும் பெற்றுக் கொண்டு இவ்விரு ஆட்சியாளர்களை மாறி மாறி தேர்ந்தெடுக்கும் அவல நிலை தான் அவர்களுக்கு.
இந்த நிலையை மாற்ற இலவசங்களை வாரி வழங்கும் ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி ஒரு முற்றுப்புள்ளி வைத்திட நாம் ஓரணியில் திரண்டு சபதம் எடுப்போம்! ஒன்றிணைவோம்! போராடுவோம்!