காமராஜர் வழியில் தொடங்கிய சேவை, காந்திய சிந்தனையில் வளர்ந்த போராட்டம்

by தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி
Digital Design

போதை இல்லா தமிழ்நாட்டிற்காக

கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் மேல் தீராத பற்றும், பாசமும் கொண்ட தக் ஷன் விஜய் அவருடைய பெயரில் காமராஜர் கிராமிய அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தொண்டாற்ற துவங்கினார்.

“அநீதிக்கு எதிராக நிற்பதே தலைமை அல்ல; மக்களுக்காக உயிரை அர்ப்பணிப்பதே தலைமை.”

ஏழை எளிய மக்கள், அடித்தட்டு வர்க்கத்தை சார்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளையும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும் தட்டிக் கேட்க அரசியல் ஒன்றுதான் வலிமையான வழி என்பதை உணர்ந்து, தமிழக மறுமலர்ச்சி முன்னணி என்னும் அமைப்பை நிறுவினார். சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து, மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்தார்.

2015 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று, 50 வருடங்களாக தமிழகத்திலிருந்து மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற இலக்குடன் பல அறப்போராட்டங்களை நடத்தி வந்த தோழர் காந்தியவாதி அவர்கள், துரதிஷ்டவசமாக ஒரு போராட்டக் களத்தில் உயிர்நீத்த சம்பவம் அவரை ஆழமாகப் பாதித்தது. அதன்பின், மது எனும் மாய அரக்கனை தமிழகத்திலிருந்து முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு, அதன் எதிரொலியாக 01-11-2019 அன்று தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.